Take a fresh look at your lifestyle.

அட்வகேட் கேரக்டரில் நிமிஷா சஜயன்

4

அட்வகேட் கேரக்டரில் நிமிஷா சஜயன்
சஜித் பசூர் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘என்ன விலை’. இதில் கருணாஸ், நிமிஷா சஜயன் உள்பட பலர் நடித்து உள்ளனர். படத்திற்கு சாம். சி. எஸ் இசையமைத்துள்ளார். விரைவில் இப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் படம் குறித்து நடிகை நிமிஷா சஜயன் கூறியது, இந்தப் படத்தின் இயக்குனர் பசூர் தான் முதலில் நான் ஹீரோயின் ஆக அறிமுகமான படத்திற்கு கதை எழுதியவர். இந்த கதையை அவர் என்னிடம் சொன்னவுடன் நடிக்க ஒப்புக் கொண்டேன். இதில் வழக்கறிஞர் கேரக்டரில் நடித்துள்ளேன்.ராமேஸ்வரம் கடல் பகுதியில் வேண்டுதலுக்காக பக்தர்கள் வீசும் காசை மையமாகக்கொண்டு படம் உருவாகியுள்ளது என்றார்.