படையப்பாவை சந்தித்த நீலாம்பரி
ரஜினிகாந்த் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் மற்றும் அவரது 75-வது பிறந்தநாளையொட்டி கடந்த டிசம்பர் 12-ந்தேதி படையப்பா படம் மீண்டும் ரீரிலீஸ் ஆனது. ரசிகர்களின் வரவேற்பால் அரங்கம் நிறைந்த காட்சிகளாகஸஇப்படம் ஓடியது.அதோடு ரூ.25 கோடிக்கு அதிகமாக வசூல் செய்தது.
இந்த நிலையில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நீலாம்பரியாக நடித்து மிரட்டிய நடிகை ரம்யாகிருஷ்ணன், தயாரிப்பாளர் பி. எல். தேனப்பன் ஆகியோர் ரஜினியை நேரில் சந்தித்தனர். அப்போது படையப்பா பட ஸ்டைலில் ரஜினி மற்றும் படக்குழுவினர் ரசிகர்களுக்கு ‘சல்யூட்’ அடித்து நன்றி தெரிவித்தனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வரவேற்பை பெற்று வருகின்றன.

