நானியின் ‘தி பாரடைஸ் பட டீசர் வெளியீடு
தெலுங்கு முன்னணி இயக்குனர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில்நானி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் தி பாரடைஸ். எஸ் எல் வி சினிமாஸ் சார்பில் சுதாகர் செருகூரி தயாரித்துள்ள இந்த படத்தில் மோகன் பாபு, கயாடு லோஹர், ராகவ் ஜூயல்,சோனாலி குல்கர்னி மற்றும் சம்புர்னேஷ் பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு சி ஹெச் சாய் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைத்துள்ளார். ஏற்கனவே வெளியான இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், கிளிம்ப்ஸ் மற்றும் முதல் பாடலான ‘ஆயா ஷேர்’ ஆகியவை வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.நரகம் கட்டவிழ்த்து விடப்படுகிறது! நெருப்பில் ஒரு புதிய சகாப்தம் தொடங்குகிறது! இந்த வெறியாட்டத்தை காணுங்கள்! என ரத்தம் பிரிக்க டீசர் அமைந்துள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் படம் வரும் செப்டம்பர் 24ஆம் தேதி ரிலீசாகிறது.
Next Post
