Take a fresh look at your lifestyle.

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்

3

வரவேற்பைக் குவிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ ஃபர்ஸ்ட் லுக்
உத்ரா புரொடக்ஷன்ஸ் , தியா ஃபிலிம்ஸ் மற்றும் டிஜே இன்டர்நேஷனல் இணைந்து தயாரிக்க, செ. ஹரி உத்ரா எழுதி, இயக்கி, தயாரிக்கும் ‘மாஸ்டர் பிளான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பிளாக் ஹூமர், ஃபேண்டஸி மற்றும் குடும்ப பொழுதுபோக்கு அம்சங்கள் கலந்த படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் தருண் விஜய், அக்‌ஷரா ரெட்டி, பாவல் நவகீதன், திவ்ய ஜகத், அப்புகுட்டி, தீபா சங்கர், தேனப்பன், சம்பத் ராம், கஜராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு கே.எஸ். பழனி ஒளிப்பதிவு செய்ய, எ.ஜெ. அலி மிர்சாக் இசை அமைக்கிறார்.தற்போது தேனி, விழுப்புரம், செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதன் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.