மை லார்ட் -விமர்சனம்
அதிகார பலத்துடன் மத்திய அமைச்சராக இருக்கும் ஆஷா சரத்தின் சிறுநீரகங்கள் செயலிழந்ததால், மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக சசிகுமாரை புரோக்கர் மூலம் தேர்வு செய்கின்றனர். சிறுநீரகம் தானம் செய்ய வரும் சசிகுமாரின் மனைவி சைத்ரா ஆச்சாரின் சிறுநீரகம் திருடப்பட்டது தெரிய வருகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? அவரின் சிறுநீரகம் திருடப்பட்டது எப்படி? என்பதே படத்தின் மீதி கதை.இது போன்ற கதைக்கு பொருத்தமாக இருப்பார் என கதை எழுதும் போது இயக்குனர்கள் முடிவு செய்து விடுகிறார்கள். அதற்கேற்றார் போல் இந்த கதையில் கச்சிதமாக பொருந்தி உள்ளார் சசிகுமார். சைத்ரா ஆச்சார் அபாரமான நடிப்பில் வெளிப்படுத்திக் கவர்கிறார். குரு சோமசுந்தரம், ஆஷா சரத், ஜெயப்பிரகாஷ், கோபி நயினார் என அனைவரும் சிறப்பாக நடித்து உள்ளனர். சிறுநீரகத் திருட்டு, பண பலம்,அதிகார துஷ்பிரயோகம் என இன்றைய அரசியல் வாதிகள் செய்யும் தில்லு முல்லு வேலையை இயக்குனர் ராஜு முருகன் தனது திரைக்கதை மூலம் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார். ஷான் ரோல்டன் இசை, நீரவ்ஷாஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
Prev Post
