Take a fresh look at your lifestyle.

முஸ்தபா முஸ்தபா- விமர்சனம்

132

முஸ்தபா முஸ்தபா- விமர்சனம்
டிவி சேனலில்
வேலை செய்யும் சதீஷ், டாக்டரான மோனிகா சின்னகொட்லாவை காதலிக்கிறார். இரு குடும்பங்களும் காதலை ஏற்றுக்கொண்டு திருமண ஏற்பாடுகள் சிறப்பாக நடக்கிறது.
திருமணத்திற்கு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில்,சதீஷ் வேறு ஒரு பெண்ணுடன்
நெருக்கமாக இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகிறது. அந்த வீடியோவை காதலிக்கு தெரியாமல் மறைக்க சதீஷ் செய்யும் வேலைகள் தான் படத்தின் மீது கதை.
காமெடி பிறந்த விறுவிறுப்பான கதையில் சதீஷ் சிறப்பாக நடித்துள்ளார். மோனிகா சின்ன கொட்லா வழக்கமான ஹீரோயின். நண்பராக வரும் சுரேஷ் ரவி படம் முழுவதும் பயணிக்கும் கேரக்டர்.கருணாகரன் தனது டைமிங் வசனங்களால் கவர்கிறார். மேலும் மானசா சவுத்ரி,சாம்ஸ், புகழ், லிவிங்ஸ்டன் போன்றவர்கள் சில காட்சிகளில் வந்து செல்கின்றனர்.நாயகன் ஒரு பிரச்சினையில் சிக்கிக்கொண்டு நண்பர்களின் உதவியுடன் அதிலிருந்து தப்பிக்க முயற்சி க்கும் கதையை கலகலப்பாக சொல்ல முயற்சித்திருக் கிறார் இயக்குநர் பிரவின் சரவணன்.