Take a fresh look at your lifestyle.

மிஸ்டர் எக்ஸ் -விமர்சனம்

108

மிஸ்டர் எக்ஸ் -விமர்சனம்
இந்தியாவின் ரா உளவு பிரிவில் அண்டர் கவர் அதிகாரியாக பணிபுரியும் சரத்குமார், அணு ஆயுதத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளை பல ஆண்டுகளாக வெளிநாட்டில் பாதுகாத்து வருகிறார். திடீரென ரஷ்ய ராணுவத்தால் சரத்குமார் கைது செய்யப்பட, அவரிடம் இருந்த மூலப்பொருளும் சிக்கி கொள்கிறது. இதனால் ரா உயர் அதிகாரியான மஞ்சு வாரியர், அவரை மீட்க, ரஷ்யாவில் உள்ள கௌதம் கார்த்தியை நியமிக்கிறார். அவர் டபுள் கேம் ஆட, ஆர்யாவிடம் பொறுப்பை ஒப்படைக்கிறார். அதில் ஆர்யா வெற்றி பெற்றாரா? கௌதம் கார்த்திக் செய்த சதி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை. ஆர்யாவின் டெடிகேஷன் அபாரம்.மிஸ்டர் எக்ஸ் கேரக்டரில் சரத்குமார் அசத்தல்.கவுதம் ராம் கார்த்திக் ஸ்டைலிஷ் வில்லன். மஞ்சு வாரியார் ஆக்சன் வேற லெவல். அதுல்யா ரவி, அனகா, ரைசா ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பிளஸ். துரந்தர் ரேஞ்சுக்கு ஒரு படத்தை கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் மனு ஆனந்த். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு, திபு நினன் தாமஸ் இசை ரசிக்க வைக்கிறது.