அனிமேஷனில் ரிலீஸ் ஆகியுள்ள மிஷன் சாண்டா
கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு மிஷன் சாண்டா படம் ரிலீஸ் ஆகி உள்ளது. பிரம்மாண்ட காட்சிகள், வேகமான திரைக் கதை மற்றும் கவர்ந்திழுக்கும் அனிமேஷன் என குழந்தைகள் ரசிக்கும் படமாக இது வந்துள்ளது.இதன் முழு அனிமேஷனும் இந்திய கலைஞர்களால் உருவாக்கப்பட்டது. கதை, திரைக்கதை மற்றும் கதாபாத்திர வடிவமைப்புகளை லாஸ் ஏஞ்சல்ஸை தலைமையிடமாகக் கொண்ட கியூரியாசிட்டி இங்க் மீடியா உருவாக்கியிருந்த நிலையில், அனிமேஷன் தயாரிப்புப் பொறுப்பை பெங்களூரைச் சேர்ந்த ஸ்டுடியோ 56 அனிமேஷன் தலைமை ஏற்றது. ஜெர்மனியைச் சேர்ந்த டூன் 2 டாங்கோ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கப்பட்ட இந்தப் படம் இந்தியா முழுவதும் தற்போது பிவிஆர் வெளியிட்டு உள்ளது.
Prev Post
Next Post