Take a fresh look at your lifestyle.

கௌதம் கார்த்தி பட ஷூட்டை தொடங்கி வைத்த மாரி செல்வராஜ்

174

கௌதம் கார்த்தி பட ஷூட்டை தொடங்கி வைத்த மாரி செல்வராஜ்
கவின் நடித்த டாடா படத்தை இயக்கியவர் கணேஷ் கே. பாபு. இவர் தற்போது புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி அதன் மூலம் கௌதம் ராம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்குகிறார். இந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பை இயக்குனர் மாரி செல்வராஜ் கிளாப் அடித்து துவங்கி வைத்தார். இந்தப் படத்தில் கௌதம் ராம் கார்த்திக் உடன் அஞ்சனா நேத்ருன்,செல்வராகவன், ராபி,பி.வாசு,ஏ.வெங்கடேஷ்,மாறன்,இந்துமதி, ஆதித்யா கதிர்,பாக்கியம் சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் வசனத்தை ராஜு முருகன் எழுத,பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்ய, சாம் சிஎஸ் இசையமைக்கிறார்.