‘பிரேமலு 2’ படம் பற்றி மனம் திறந்த மமீதா பைஜூ
நஸ்லென் மற்றும் மமீதா பைஜூ ஆகியோர் நடிப்பில் வெளியான படம் பிரேமலு. இப்படம் திரைக்கு வந்து நல்ல வெற்றியை பெற்று ரூ 100 கோடிக்கு மேல் வசூலையும் குவித்தது.
இதைத்தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. ஆனால் அதற்கான ப்ரீ புரொடக்சன் பணிகள் எதுவும் துவங்கவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களாக ‘பிரேமலு2’ படம் ஒத்திவைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இது குறித்து ஹீரோயின் மமீதா பைஜு கூறியது, ‘பிரேமலு 2’ ஒத்திவைக் கப்பட்டதாக வரும் தகவல்கள் அதிகாரப் பூர்வமாக வரவில்லை. நானும் பார்த்தேன். என்ன ஏது என்று எனக்கு தெரியவில்லை. அதைப் பற்றி முழுசா எதுவும் தெரியாததால் சொல்ல முடியாது. ஆனால் படம் நிச்சயம் உருவாகும் என்றார்.
Next Post