விஜய் ஆண்டனிக்கு ஜோடியான மகாராஷ்டிரா நடிகை
‘அருவி’ மற்றும் ‘வாழ்’ படங்களின் இயக்குநர் அருண் பிரபு இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘சக்தி திருமகன்’ படம் மூலம் மகாராஷ்டிராவை சேர்ந்த நடிகை திருப்தி ரவிந்தரா கோலிவுட்டில் ஹீரோயின் ஆக அறிமுகமாகிறார். ஐந்து வருடங்கள் மேடை நாடக அனுபவம் பெற்ற பிறகு நடிப்புத் துறைக்குள் நுழைந்துள்ளார். அதோடு கடந்த ஈஸ்டர்ன் மசாலா, லிசோல், ஜெப்டோ, ஐஇடிஎல் மற்றும் சைடஸ் உள்ளிட்ட பல தேசிய விளம்பரங்களில் பணிபுரிந்த அனுபவமும் பெற்றிருக்கிறார்.தமிழ் கலாச்சாரத்தை மதிக்கும் விதமாகவும் ரசிகர்களுடன் இன்னும் நெருக்கமாகவும் திருப்தி தமிழ் மொழி கற்று கொள்கிறார். அதோடு இன்னும் பல தமிழ் படங்களில் நடிக்க விரும்புகிறார். இந்தப் படம் வரும் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.
Next Post