Take a fresh look at your lifestyle.

லவ் ஓ லவ்

2

லவ் ஓ லவ்
வேலைக்கு போய் உழைத்து சம்பாதிக்கும் பணத்தை தந்தையிடம் கொடுக்கும் பொறுப்பான பையனான பவிஷ், நாக துர்காவை காதலிக்கிறார். ஆனால் காதலியின் ஆடம்பர செலவுகள் மற்றும் பொறுப்பற்ற செயலால் அவரை பிரிய முடிவு செய்கிறார். அதன்பின் நான்கு ஆண்டுகளாக காதலனாக தான் செய்த அனைத்தையும், நான்கு மாதங்கள் காதலி செய்து காட்ட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கிறார். அந்த சவாலை நாக துர்கா ஏற்ற பிறகு நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக்கதை. காதலில் ஆண்கள் மட்டுமே விட்டுக் கொடு க்க வேண்டுமா? பெண்களும் ஒருமுறை அந்த இடத்தில் இருந்து வாழ்க்கையை பார்த்தால் என்ன நடக்கும்? என்ற சுவாரஸ் யமான கேள்வியை மையமாக வைத்து இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் படத்தை உருவாக்கி உள்ளார். பவிஷ் இயல்பான நடிப்பில் கவனம் ஈர்க்கிறார். காதல், கோபம், ஏமாற்றம் என பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்துள்ளார்.நாக துர்கா பக்கத்து வீட்டுப் பெண் போல எளிமையாக தோன்றுகிறார். இவர்களோடு கே.எஸ்.ரவிக்குமார், செல்வராகவன், வனிதா விஜயகுமார் ஆகியோர் தங்கள் அனுபவமான நடிப்பால் படத்திற்கு வலு சேர்க்கிறார்கள். பி ஜி முத்தையாவின் ஒளிப்பதிவு, பாக்ஸனின் இசை படத்திற்கு பிளஸ்.