ரச்சிதா, யாஷிகா , அஸ்மிதா கலக்கும் ‘லாலி பாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி ‘
காவியா புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ் 2 மூவிஸ் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’. இதில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இப்படத்தை கே.ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். பி. மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படத்திற்க்கு அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இந்த விழாவில் இயக்குனர் சங்கத் தலைவர் ஆர்.வி. உதயகுமார், வழக்கறிஞர்கள் சிவராம கிருஷ்ணன் ,தெய்வ சிகாமணி மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை இயக்குனர் செந்தில்நாதன் மற்றும் தயாரிப்பாளர்,நடிகர் மஞ்சுநாத் ஆகியோர் வரவேற்றார்.
Prev Post