லோகேஷ் கனகராஜின் ‘மிஸ்டர் பாரத்’ ரிலீசுக்கு தயார்
இயக்குனர் லோகேஷ் கனகராஜ்,சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிசாமி ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் மிஸ்டர் பாரத்.இப்படம் மூலம் ஒரே நேரத்தில் 6 புதிய திறமையாளர்களை சினிமாவுக்கு அறிமுகப்படுத்துகின்றனர். நடிகர் பாரத் கதாநாயகனாகவும், சம்யுக்தா விஸ்வநாதன் கதாநாயகியாகவும் அறிமுகமாகின்றனர். இயக்குநராக நிரஞ்ஜன், இசையமைப்பாள ராக பிரணவ் முனிராஜ், கலை இயக்குநராக பாவ்னா கோவர்தன், படத்தொகுப்பாளராக திவாகர் டெனிஸ் ஆகியோரும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகின்றனர். இப்படத்தின் தலைப்பு அறிவிப்பு கிளிம்ஸை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நகைச்சுவை ததும்ப, அறிமுகப்படுத்திய விதம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படம் விரைவில் தியேட்டரில் வெளியாகவுள்ளது.
Next Post