Take a fresh look at your lifestyle.

செப்டம்பரில் லோகா 2 ஷூட்டிங் :கல்யாணி பிரியதர்ஷினி தகவல்

85

செப்டம்பரில் லோகா 2 ஷூட்டிங் :கல்யாணி பிரியதர்ஷினி தகவல்
சூப்பர் ஹீரோயினாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்த,லோகா அத்தியாயம்-1. படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றது. சர்வதேச அளவில் வசூலிலும் சாதனை படைத்த இந்த படத்தின் 2-ம் பாகம் எப்போது வெளியாகும்என எதிர் பார்க்கப்பட்டது. இது குறித்து ஒரு விழாவில் பேசிய கல்யாணி பிரியதர்ஷன், “லோகா-2 படத்தின் திரைக்கதை எழுதும் பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர் பார்க்கிறேன் என்று கூறினார்.டொமினிக் அருண் இயக்கிய இதில் நீலி என்று அழைக்கப்படும் சந்திரா கேரக்டரில் கல்யாணி நடித்திருந்தார். 2-ம் பாகத்தில் டொவினோ தாமஸ், துல்கர் சல்மான் ஆகியோரும் நடிக்க இருக்கின்றனர்.