- இயக்குனராகும் கென் கருணாஸ்
நடிகர் கருணாசின் மகனான கென்
கருணாஸ் அசுரன், விடுதலை-2, வாத்தி
உள்பட பல படங்களில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இதற்கு முன்பு அம்பாசமுத்திரம் அம்பானி,நெடுஞ்சாலை போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார். அதோடு தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் உதவி
இயக்குனராக பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. இந்நிலையில் கென் கருணாஸ் புதிய படமொன்றை இயக்க திட்டமிட்டுள்ளார்.அவரது ஆசையை தந்தை கருணாசிடம் கூற படத்தை நானே தயாரிக்கிறேன் என கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து படத்தில் ஃபிரீ புரொடக்ஷன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
Prev Post