Take a fresh look at your lifestyle.

மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி

1

மோகன் ராஜா இயக்கத்தில் கார்த்தி
‘சிங்கம் 2’, ‘சர்தார்’ மற்றும் சர்தார் 2 போன்ற வெற்றிப் படங்களை தயாரித்த ‘பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்து நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை இயக்குநர் மோகன் ராஜா இயக்குகிறார். இந்த புதிய படத்தின் மூலம், கார்த்தியும் இயக்குநர் மோகன் ராஜாவும் முதன்முறையாக இணைகிறார்கள். அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில், அனைவராலும் விரும்பப்படும் கார்த்தியின் பரிமாணத்தை இந்தப் படம் மீண்டும் வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.’சந்தோஷ் சுப்ரமணியம்’, ‘வேலாயுதம்’ மற்றும் ‘தனி ஒருவன்’ போன்ற படங்கள் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் மோகன் ராஜா, திரை உலகில் தனது 25-வது ஆண்டை கொண்டாடுகிறார். மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.