காஜல் அகர்வால் பட ரிலீஸ் அப்டேட்
ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஐஜி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள ‘தி இந்தியா ஸ்டோரி’ படத்தில் காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே இணைந்து நடித்துள்ளனர்.இப்படம் வரும் ஜூலை 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை சேட்டன் டிகே இயக்க, சாகர் பி. ஷிண்டே எழுதி தயாரித்துள்ளார். இந்த படம் தேசிய அளவில் தாக்கம் ஏற்படுத்தும் முக்கியமான பிரச்சினையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.குறிப்பாக பூச்சிக்கொல்லி விவசாயத்தில் இரசாயனங்களின் தவறான பயன்பாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள சர்ச்சைகளை வெளிச்சமிட்டு காட்டுகிறது. பொதுமக்களின் உடல் நலத்தை பாதிக்கும் மிகப் பெரிய பிரச்சினையை இக்கதை எடுத்துரைக்கிறது. இப்படம் தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாக உள்ளது.
Prev Post
Next Post