Take a fresh look at your lifestyle.

நாங்க இருந்தா தான்! – கார்த்தி சிதம்பரம்

129

நாங்க இருந்தா தான்! – கார்த்தி சிதம்பரம்

ராகுல் காந்தியுடன் கனிமொழி பேச்சுவார்த்தை நடத்தி 6 நாட்கள் ஆச்சு; ஒரு குழு அமைக்கிறோம் என்று சொன்னாங்க, ஆனா இன்னும் அமைக்கல. குழு அமைக்காமல் தாமதம் செய்வது திமுகதான்.

1967 முதல் நாங்கள் ஆட்சியில் இல்லை; தனியா நின்னு தேர்தல்ல ஜெயிக்கிற நிலைமையிலும் இல்லை.

நாங்கள் பலமான கட்சியாக இல்லை என்றாலும் கூடுதல் பலம் கொடுக்கும் கட்சியாக இருக்கிறோம்.

நாங்கள் இருந்தால்தான் அந்த கூட்டணிக்கு மதச்சார்பின்மை முகம் கிடைக்கும்.

காங்கிரஸ் கட்சியை தனிப்பட்ட முறையில் பார்த்தால் குறிப்பிட்ட அளவுக்குதான் வாக்கு இருக்கும்.

ஆனால் ஒரு கூட்டணியில் சேர்ந்துவிட்டால் எங்களை கூட்டலாக மட்டும் பார்க்க கூடாது, பெருக்கலாக பார்க்க வேண்டும்.

– காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்