சினிமாவில் இது எனக்கு செகண்ட் இன்னிங்ஸ்: தனுஷ்
வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் 2 நாட்கள் ‘வேல்ஸ் நக்ஷத்ரா 2026’ என்ற கலாச்சார விழா நடைபெற்றது. இதில் நடிகர் தனுஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல் நாள் நிகழ்வில் இயக்குநர்கள் பிரேம் குமார், அபிஷன் ஜீவந்த், நடிகர் கென் கருணாஸ், பிரபல யூடியூபர் வி.ஜெ.சித்து, ஹர்ஷத் கான், இசையமைப்பாளர் சாய் அப்யங்கர், பாடகி ஷிவாங்கி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ், நடிகைகள் பிரியங்கா மோகன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோரும் பங்கேற்றனர். விழாவில் நடிகர் தனுஷ் பேசியது, “நமக்கு கிடைத்துள்ளதை பெரிய ஆசிர்வாதமாக நினைத்து அதை தக்கவைத்து கொள்ள இரவும் பகலும் பாடுபடவேண்டும். திரைத்துறையில் 25 ஆண்டுகள் என்பது மிகவும் குறைவு தற்போது என் திரைப் பயணத்தின் இரண்டாம் அத்தியாத்தை தொடங்கியுள்ளேன்.