Take a fresh look at your lifestyle.

முதல்வர் விஜய்யை பார்த்து வியக்கிறேன்: டாக்ஸிக் பட விழாவில் யாஷ் பேச்சு

52

முதல்வர் விஜய்யை பார்த்து வியக்கிறேன்: டாக்ஸிக் பட விழாவில் யாஷ் பேச்சு
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டாக்ஸிக். ஆக்‌ஷன், கேங்ஸ்டர் உலகம், குடும்ப உறவுகள், துரோகம், அதிகாரப் போட்டி என பல்வேறு அம்சங்களோடு உருவாகியுள்ள இப்படத்தை கேவிஎன் புரொடக்ஷன்ஸ் மற்றும் மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. வரும் 26-ம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது. இதை முன்னிட்டு சென்னையில் நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் யாஷ் பேசியது,‘ முதல்வர் விஜய் எல்லோரையும் கவரக்கூடிய மனிதர். தமிழக மக்கள் ரொம்ப அதிர்ஷ்ட சாலிகள். விஜய் மீது உள்ள பாசத்தை தேர்தல் மூலம் நிரூபித்திருக்கி றார்கள். அவரும் மக்கள் மீது உள்ள பாசத்தை முதல்வராக செய்யும் கடமைகள் மூலம் அவரும் தெரியப்படுத்தி வருகிறார்.விஜய்யின் பொறுப்புணர்ச்சி யை பார்க்கும் போது நமக்கே வியப்பாக இருக்கிறது.மக்களுக்கான பணியினை நல்லமுறையில் செய்து கொண்டிருக்கிறார்.