சமூக அக்கறை உள்ள கதை என்றால் உடனே நடிக்க தயார்: யோகி பாபு
யோகி பாபு நடிப்பில் இயக்குநர் சுரேஷ் சங்கையா இயக்கியுள்ள படம் ‘கெணத்த காேணாம்’. இந்த படம் கடந்த 13-ந் தேதி ரிலீஸ் ஆகி பெரிய வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து நடந்த வெற்றி விழாவில் பங்கேற்ற யோகி பாபு பேசும்போது, இதுவரை 300 படங்களை கடந்து விட்டேன். இனி இது போன்ற படங்களில் நடிக்க ஆசை. இந்த வெற்றியை பார்க்க இயக்குனர் சுரேஷ் சங்கையா நம்முடன் இல்லை. இது போன்ற சமூக அக்கறை உள்ள கதை வைத்துள்ள புதுமுக இயக்குனர்கள் என்னிடம் வந்தால் உடனே அதில் நடிக்க தயார் என கூறினார். இந்த விழாவில் தயாரிப்பாளர் ரமேஷ்பாபு,
நடிகைகள் லவ்லின்,ரேச்சல் ரெபாக்கா, விஜி சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
Prev Post