துரந்தர்-2 ஒவ்வொரு இந்தியரும் பார்க்க வேண்டிய படம்: ரஜினி பாராட்டு
பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தாம் இயக்கத்தில் ரன்வீர் சிங் நடித்துள்ள துரந்தர்-2 (தி ரிவஞ்ச்) படம் கடந்த 19ம் தேதி வெளியானது. முதல் பாகத்தை போலவே இந்த படமும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூலை குவித்து வருகிறது. ரிலீஸ் ஆகி 4 நாளில்761 கோடி வசூலை ஈட்டியது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் படம் பார்த்துவிட்டு ஒவ்வொரு இந்தியரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் என பட குழுவுக்கு பாராட்ட தெரிவித்துள்ளார். இதனிடையே ஐபிஎல் போட்டிக்காக சென்னை வந்துள்ள சிஎஸ்கே அணி கேப்டன் தோனி,சத்தியம் தியேட்டரில் துரந்தர்-2 படத்தை பார்த்து ரசித்தார்.
Next Post