நடிக்க வராவிட்டால் கார் ரேசர் ஆயிருப்பேன்: கீர்த்தி பாண்டியன்
இயக்குனர் உத்ய்.கே இயக்கியுள்ள படம் அகேனம். இதில் அருண் பாண்டியன், கீர்த்தி பாண்டியன், ரமேஷ் திலக், கல்கி உள்பட பலர் நடித்துள்ளனர்.ஏபி குரூப்ஸ் தயாரித்துள்ள இந்த படத்துக்கு பரத் வீரராகவன் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 4-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இதையொட்டி படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கீர்த்தி பாண்டியன் பேசியது,இந்தப் படத்தில் நான் இந்திரா எனும் வேடத்தில் ஒரு கேப் டிரைவராக நடித்திருக்கிறேன். எனக்கு டிரைவிங் மிகவும் பிடிக்கும். நடிகையாகி நடிக்க வராவிட்டால் நான் ஒரு கார் பந்தய வீராங்கனை ஆகியிருப்பேன். இறுதியாக அப்பா, எனக்கு எப்போதும் ஆதரவளித்துக் கொண்டிருக்கும் என்னுடைய ஹீரோ.சூப்பர் ஹீரோ அப்பா தான் என்றார்.
