நல்ல கதைகள் வந்தால் தமிழில் நடிக்க தயார்:சமந்தா ஓபன் டாக்
பிரபல நடிகை சமந்தா தயாரித்து நடித்துள்ள படம் மா இண்டி பங்காரம். இப்படம் தமிழில் “எங்கள் தங்கம்” என்ற பெயரில் தயாராகி உள்ளது.இப்படத்தை சமந்தாவின் கணவரும் பிரபல இயக்குனருமான ராஜ் நிடிமொரு உருவாக்கியுள்ளார்.இயக்குநர் பி.வி. நந்தினி ரெட்டி இயக்கியுள்ள இந்தப்படம் இன்று 19-ம் தேதி வெளியாகிறது. இதையொட்டி சென்னையில் நடந்த ஃப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் பங்கேற்ற நடிகை சமந்தா பேசியது,“சென்னைக்கு வருவது எப்போதுமே எனக்கு வீட்டிற்கு வருவது போன்றது தான்.எனக்கு எப்போதுமே ஒரு வருத்தம் உண்டு. தமிழ் சினிமாவில் நான் இன்னும் அதிகமான படங்கள் நடித்திருக்க வேண்டும் என்று அடிக்கடி நினைப்பேன். அந்த வருத்தம் இன்னும் இருக்கிறது. ஆனால் இன்னும் காலம் இருக்கிறது. நல்ல கதைகளும், நல்ல கதாபாத்திரங்களும் வந்தால் கண்டிப்பாக தமிழ் படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன் என்றார்.
Prev Post