Take a fresh look at your lifestyle.

தமிழிலும் எனக்கு நல்ல அறிமுகம் கிடைக்கும்!

72

தமிழிலும் எனக்கு நல்ல அறிமுகம் கிடைக்கும்!

கலீஃபா பட ஹீரோயின் கைரா வாசுதேவன் நம்பிக்கை
பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் வெளியான ‘கலீஃபா’ திரைப்படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானவர் நடிகை கைரா வாசுதேவன். இத்திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஏராளமான ரசிகர்களால் இணையத்தில் தேடப்படும் பிரபலமாக மாறி இருக்கிறார். அதோடு தமிழிலும் தனது அறிமுகத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார். இந்த தருணத்தில் அவர் தனது கலீஃபா பட அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்.

முதல் மலையாள பட அனுபவம் எப்படி?
பிருத்விராஜ் சுகுமாரன், இயக்குநர் வைசாக் மற்றும் எழுத்தாளர் ஜினு வி.ஆபிரகாம் ஆகியோருடன் இணைந்து எனது முதல் மலையாள படத்தில் பணியாற்றியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பேன். இத்தகைய ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றிய போது மிகுந்த மன அழுத்தம் இருந்தது. அவர்கள் என் மீது நம்பிக்கை வைத்திருந்ததுடன் என் மீது பெரிய எதிர்பார்ப்புகளையும் கொண்டிருந்தனர். ஒட்டுமொத்த படக் குழுவினரும் என்னை மிகவும் இயல்பாகவும், பாதுகாப்பாகவும் உணர வைத்தனர். படம் முழுவதும் எனக்கு வழிகாட்டினர். அதற்காக நான் மிகவும் நன்றி உள்ளவளாக இருக்கிறேன்.

கலீஃபா படத்தில் கற்றது என்ன?
படப்பிடிப்பு தளம் தொடர்ந்து கற்றுக் கொள்ளும் இடமாக அமைந்தது. குறிப்பாக திரைப்பட தயாரிப்பின் தொழில்நுட்ப அம்சங்களையும், நடிப்பின் நுணுக்கங்களை யும் புரிந்து கொள்ள இயக்குநர் வைசாக் உதவினார்.‌ படப்பிடிப்பு தளத்தில் ஒவ்வொரு நாளும் கற்றுக் கொள்வதற்கு நிறைய விசயங்கள் இருந்தன. லென்ஸ் மற்றும் பிரேமிற்கு ஏற்ப எவ்வாறு நடிப்பது என்பது முதல் லைட்டிங் எவ்வாறு செயல்படுகிறது என்பது வரை… தொழில்நுட்ப ரீதியாக வைசாக் எனக்கு பல விசயங்களை கற்றுக் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் நான் புதிதாக ஏதேனும் ஒன்றை கற்றுக்கொண் டேன்.

ஆக்சன் காட்சிகளிலும் அசத்தியது எப்படி?
முதல்முறையாக சண்டைக் காட்சியில் நடித்த போது மிகவும் பதற்றம் அடைந்தேன். ஆனால் நான் பாதுகாப்பாகவும், ஒரு குடும்ப சூழலில் இருப்பது போலவும் உணர்வதை உறுதி செய்தார். படம் முழுவதும் அவர் எனக்கு உறுதுணையாக இருந்து, எனது பதற்றத்தை விலக உதவினார்.‌

பிருத்விராஜுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து சொல்லுங்க..
அவருடன் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது.அவர் அன்பான மற்றும் நம்பிக்கையூட்டும் ஒரு சக நடிகர்.‌ அவர் மிகவும் கனிவான,ஆதரவானவர். புதியவர் களை வரவேற்கும் மனப்பான்மையுடன் இருந்தார். அவருடன் இணைந்து வேலை செய்தது உண்மையிலேயே மகிழ்ச்சியான அனுபவம். பிருத்விராஜுடன் இணைந்து எனது திரை பயணத்தை தொடங்கியதை நான் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியமாக கருதுகிறேன். இத்தகைய வாய்ப்பு எத்தனை பேருக்கு கிடைக்கும் என்று தெரியவில்லை .

மலையாளத் சினிமாவை பற்றி ?
மலையாளத் திரைப்படத் துறையும், கேரளா வும் என் இதயத்தில் மிக சிறப்பான இடத்தை பிடித்துள்ளன. நான் எத்தனை மொழிகளில் பணியாற்றினாலும் மலையாள சினிமாவில் தொடர்ந்து பணியாற்றுவேன். மலையாளம் எனக்கு ஒரு வீடாகமாறிவிட்டது. குறிப்பாக எனது முதல் படம் இங்குதான் வெளியானது என்பதால் இந்த உணர்வு ஏற்பட்டுள்ளது.

தமிழில் அறிமுகம் எப்போது?
தமிழ் சினிமாவில் நடிக்கும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன். ஒரு சில கதைகளும் வந்துள்ளது. விரைவில் அந்த படத்திற்கான அறிவிப்பு வெளியாகும். மலையாளத்தை போலவே தமிழிலும் அந்தப் படம் நல்ல அறிமுகமாக இருக்கும் என்றார்.