ஹாட் ஸ்பாட்-2 மச் விமர்சனம்
ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் 2-வது பாகம் ஹாட் ஸ்பாட்-2 மச் என்ற பெயரில் இன்று ரிலீஸ் ஆகிறது. இதிலும் மூன்று கதைகளை இயக்குனர் சொல்லி இருக்கிறார். நடிகர்களின் வெறித்தனமான ரசிகர்கள், சுதந்திரம் என்ற பெயரில் இளம் பெண்கள் நடந்து கொள்ளும் விதம்,2025 – 2050 டைம் டிராவல் என மூன்று கதைகள் செம ஹாட் ஆக இருப்பது தான் ஹாட்ஸ்பாட் 2 மச் படத்தின் கதை.
மாஸ் ஹீரோக்களுக்கு ரசிகர்களாக இருக்கும் ஆதித்யா பாஸ்கர், ரக்ஷன் ஆகியோர் கேரக்டர், ஜென் சி கிட்ஸ்களின் இன்றைய நிலை. எம் எஸ் பாஸ்கர் வழக்கம் போல் ஸ்கோர் செய்கிறார். சஞ்சனா திவாரி இன்றைய இளம் பெண்களை திரையில் பிரதிபலித்துள்ளா ர்.தம்பி ராமையா பேசும் வசனங்கள் தற்போதைய தந்தைகளின் மனநிலை. அஸ்வின் குமார் – பவானிஸ்ரீ காட்சிகள் கலகலப்பு. கதை கேட்கும் தயாரிப்பாளராக பாலமணி மார்பன் அவரிடம் கதை சொல்லும் பிரியா பவானி சங்கர் வரும் காட்சிகள் ரசிக்க வைக்கி ன்றன. இதே போன்று பிரிகிடா சகா அழகான தோற்றத்தில் வந்து அசத்தியுள்ளார்.
ஹாட்ஸ்பாட் 2 மச் சுவாரஸ்சியம் குறைவு என்றாலும் இளம் தலைமுறையினருக்கு ஏற்றாற்போல் படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர்விக்னேஷ் கார்த்திக்.சதீஷ் ரகுநாதனின் இசை, ஜகதீஷ் ரவியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது.
Prev Post
Next Post