ஹீரோவான இளையராஜா அண்ணன் மகன்
இளையராஜாவின் இசை வளர்ச்சிக்கு ஆரம்பகாலத்தில் மிகப்பெரிய தூணாகவும், பக்கபலமாகவும் இருந்தவர் அவருடைய மூத்த அண்ணனும், திரையுலகின் முன்னணி தயாரிப்பாளருமான ஆர்.டி. பாஸ்கர். தற்போது அவருடைய கடைசி மகன் ஜெயன் தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமாகிறார். காதல் பின்னணியைக் கொண்ட ஒரு அழுத்தமான மியூசிக்கல் சப்ஜெக்ட் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை ரமணன் பாலகங்காதரன் தயாரிக்க உள்ளார். இந்தப் படத்திற்க்கு இயக்குனர் வெங்கட் பிரபு,கதை எழுத,யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.கிரியேட்டிவ் புரொடியூசராக இயக்குனர் சுதா கொங்கரா பணியாற்றுகிறார். இதில் ஜெயனுடன் இணைந்து சோனா ஒலிக்கல், வாகை சந்திரசேகர், குரு சோமசுந்தரம், ரோஜு, பிபியன், ஆர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். “குடும்பஸ்தன்” படத்தின் ஒளிப்பதிவாளர் சுஜித் என் சுப்ரமணியம் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
Prev Post
Next Post