Take a fresh look at your lifestyle.

மகிழ்ச்சியில் ஹார்ட் பீட் சீசன் 2 குழுவினர்

186

மகிழ்ச்சியில் ஹார்ட் பீட் சீசன் 2 குழுவினர்
டிஜிட்டல் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டெலி பேக்டரி தனது சமீபத்திய வலைத் தொடரான ஹார்ட் பீட் சீசன் 2 மூலம் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் புதிய சாதனைகளை படைத்துள்ளது. பார்வையாளர்களும் விமர்சகர்களும் வழங்கிய பாராட்டுகளால், இந்த இரண்டாம் சீசன் கதையின் ஆழம், உணர்ச்சி பூர்வ வெளிப்பாடு, மற்றும் காட்சித் தரத்தில் முதல் சீசனை விட மேலும் உயர்ந்த அனுபவத்தை வழங்குகிறது. இத்தொடர் வெளியானதில் இருந்துபல்வேறு தளங்களில் டிரெண்டாகி வருகிறது.நவீன உறவுகளின் உண்மையான பிரதிபலிப்பு, திறமையான நடிப்பு, மற்றும் உன்னதமான தயாரிப்பு தரத்திற்காக பெரிதும் பாராட்டப்படுகிறது என டெலி பேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தயாரிப்பாளர் ராஜ வேலு தெரிவித்துள்ளார்.