Take a fresh look at your lifestyle.

விண்டேஜ் லுக்கில் கயாடு லோஹர்

119

விண்டேஜ் லுக்கில் கயாடு லோஹர்
இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ்  நடித்துள்ள படம் ‘பள்ளிச்சட்டம்பி. இதில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடிக்கிறார். படத்தில் அவருடைய கேரக்டர் போஸ்டர் வெளியானது. அதில் கயாடு லோஹர் விண்டேஜ் தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இருப்பினும் படத்தில் அவரது கேரக்டரின் பெயரை படக்குழுவினர் இன்னும் வெளியிட வில்லை.வேர்ல்ட்வைட் பிலிம்ஸ் மற்றும் சி கியூப் ப்ரோஸ் ஆகிய நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. கன்னட திரைப்படமான ‘முகில்பேட் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ படம் மூலம் மலையாளத்திலும் கால் பதித்தார்.பின்னர் ‘டிராகன்’படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி ஆகியுள்ளார்.அதோடு துல்கர் சல்மான் நடிக்கும் ‘ஐ எம் கேம்’ படத்திலும் அவர் தற்போது நடிக்கிறார்.