பிலிம் சேம்பருக்கு வேண்டுகோள் விடுத்த ரெட் லேபிள் படத்தின் ஹீரோ
கே.ஆர்.வினோத் இயக்கத்தில் ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்து கதாநாயகனாக நடித்துள்ள படம் ரெட் லேபிள்.இதில் கதாநாயகியாக அஸ்மின் நடித்துள்ளார். மேலும் ஆர்.வி. உதயகுமார், முனீஷ்காந்த், அனுமோகன் உட்பட பலர் நடித்துள்ளனர்.படத்திற்கு கைலாஷ் மேனன் இசை அமைத்துள்ளார். வரும் 6-ந்தேதி படம் ரிலீஸ் ஆகறது இந்த நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் லெனின் பேசியது, இந்த படத்தில் எனக்கு பல அனுபவங்கள் கிடைத்தது. முதலில் ஒரு தலைப்பை பதிவு செய்தோம்.அது காலாவதி ஆகிவிட்டது. அதை புதுப்பிக்க வேண்டும் என்ற விஷயம் எனக்கு தெரியாது. பிலிம் சேம்பரில் கணினி மயமாக்கி இணைந்தால் மிக சுலபமாக இந்த வேலையை செய்ய முடியும்.ஆனால் யாரும் இதை செய்வதில் லை இதனால் தயாரிப்பாளர்கள் தான் அவதிப்படுகிறார்கள் என்றார்.
Prev Post
Next Post