கமல், ரஜினி குறித்து ஓப்பனாக பேசிய கங்கை அமரன்
ஏஏஏ பிக்சர்ஸ் சார்பில் அனுராதா அன்பரசு தயாரிப்பில், வீர அன்பரசு இயக்கி, நடித்துள்ள படம் “கமாண்டோவின் லவ் ஸ்டோரி”. இந்த படத்தில் ஹீரோயின் ஆக ஏஞ்சல், ஸ்ரீதேவி நடித்துள்ளனர். மேலும் பப்லு பிரித்திவிராஜ், புதுப்பட்டு சக்திவேல், வாழை ஜானகி ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டு நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் கங்கை அமரன் கலந்து கொண்டு பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட,இயக்குனர் அரவிந்தராஜ் பெற்று கொண்டார். விழாவில் கங்கை அமரன் பேசியது, கமல் இயல்பாக இருக்க மாட்டார். ரஜினிகாந்த் மிகவும் இயல்பாக இருப்பார். அனைவரும் இயல்பாக தான் இருக்க வேண்டும். அதுதான் நல்லது என்றார்.
Next Post