நிஞ்சா படத்தில் தஞ்சை பையனாக நடிக்கும் ஜி.வி.பிரகாஷ்
இயக்குனர் முருகு இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படமான நிஞ்சா, தஞ்சாவூரில் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தில் நாயகியாக பிரார்த்தனா நடிக்கிறார். ஸ்ரீபதி சினிமாஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். இந்த விழாவில் பேசிய ஜிவி பிரகாஷ், ‛‛தஞ்சாவூரை மையப்படுத்தி நிஞ்சா படம் உருவாகி வருகிறது. இந்த கதையை கூறிய உடனே எனக்கு பிடித்து விட்டது. காமெடி, காதல் உள்ளிட்ட அனைத்து அம்சங்களும் இதில் இருக்கிறது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும். அடுத்த ஆண்டு படம் வெளியாகும். இந்த படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறது. பொதுவாக திரைப்படங்களில் கஞ்சா” பயன்படுத்துவது போன்ற காட்சிகள் இருக்க கூடாது என்பது தான் எனது விருப்பமும் என தெரிவித்தார்.
Prev Post
