Take a fresh look at your lifestyle.

மாதவன் நடிப்பில் ஜி.டி. நாயுடு பயோ பிக்

85

மாதவன் நடிப்பில் ஜி.டி. நாயுடு பயோ பிக்
ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்ட ராக்கெட்டரி படத்தை நடிகர் மாதவன் இயக்கி, நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. தற்போது கோவையை சேர்ந்த கண்டுபிடிப்பாளர் மற்றும் தொழில்துறை முன்னோடி ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி யுள்ள ஜிடிஎன் என்ற படத்தில் ஜிடி நாயுடுவாக மாதவன் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார். வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் மற்றும் ட்ரைகலர் பிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் சத்யராஜ், பிரியாமணி, ஜெயராம், துஷாரா விஜயன், தம்பி ராமையா, வினய் ராய் மற்றும் கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் ஜூலை மாதம் படம் ரிலீஸ் ஆக உள்ளது.