Take a fresh look at your lifestyle.

விக்ரம் வேதா முதல் மகா அவதார் நரசிம்மா வரை… பான் இந்தியாவை கலக்கும் சாம் சி.எஸ்

1

விக்ரம் வேதா முதல் மகா அவதார் நரசிம்மா வரை…
பான் இந்தியாவை கலக்கும் சாம் சி.எஸ்

இந்திய சினிமாவில் ஏ ஐ டெக்னாலஜி நுழைந்துவிட்ட இக்காலத்தில் தொழில்நுட்ப கலைஞர்கள் தனித்துவமாக தெரிவதற்கு அவர்களின் தனித்திறமை மிகவும் இன்றியமையாததாக உள்ளது. ஏராளமான இளைஞர்கள் இன்று இசையமைப்பாளராக வந்து கொண்டிருக்கும் வேளையில் தனது தனித்துவமான பேக்ரவுண்ட் ஸ்கோர் (பின்னணி இசை) மூலம் நிரந்தரமான இடத்தை இந்திய சினிமாவில் பெற்றுள்ள மியூசிக் டைரக்டர் சாம் சி எஸ் ஒரு பான் இந்தியா இசையமைப்பாளர் என்று சொல்வதில் ஆச்சரியம் இல்லை. தமிழில் ‘ஓர் இரவு’ என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானாலும், அவர் திரையுலகில் பெரிய அளவில் கவனம் ஈர்த்து, பரவலாக அறியப்பட்டது ‘அம்புலி’ திரைப்படத்தின் மூலம் தான். அதன் பிறகு விக்ரம் வேதா படம் அவரை உச்சத்துக்கு கொண்டு சேர்த்தது. தொடர்ந்து தமிழ் தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இசையமைத்து வரும் அவர், சென்னை, ஹைதராபாத், மும்பை என மூன்று இடங்களில் தனது மியூசிக் ஸ்டுடியோவை நிறுவியுள்ளார். அறிமுக இயக்குனர்கள் முதல் முன்னணி இயக்குனர்கள் வரை யாராக இருந்தாலும் கன்டென்ட் இருந்தால் அந்த படத்திற்கு உடனே இசையமைக்க சம்மதிக்கிறார். இவர் போடும் அதிரடியான பிஜிஎம் மூலம் திரையில் ஹீரோயிசம் காட்டாத நடிகர்களே இருக்க முடியாது. அதேபோல் ஹாரர் படங்கள் முதல் ஆன்மீக படம் வரை எல்லா ஜானரிலும் பயணிக்கிறார். இசைக்கு மொழி கிடையாது என்ற வார்த்தையை மெய்ப்பிக்கும் வகையில் பழமொழி படங்களுக்கு பம்பரமாய் சுழன்று இசையமைத்து வருகிறார்.கடந்த சில ஆண்டுகளில், பின்னணி இசைக்காக அதிகம் பாராட்டப்பட்ட இசையமைப்பாளர் களில் ஒருவராக சாம் சி எஸ் திகழ்கிறார். கதையின் உணர்வுகளை இசையின் மூலம் ஆழமாக ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் அவரது திறமை, பல திரைப்படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக த்ரில்லர் படங்களில் அவர் உருவாக்கும் சவுண்ட் டிசைன் மற்றும் பின்னணி இசை, ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத் தை வழங்கி வருகிறது. அதேநேரத்தில், சமீபத்தில் வெளியான “இம்மார்டல்” திரைப்படத்தின் “லவ் யூ லவ் யூ காட்டேரி” பாடல், அவரது மெலடி திறமையையும் மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. ஒருபுறம் காதல் பாடல்களில் மனதை வருடும் மெலடியையும், மறுபுறம் திரில்லர் படங்களில் பரபரப்பை கூட்டும் பின்னணி இசையையும் சமமாக கையாளும் இசையமைப்பாளராக சாம் சி எஸ் தொடர்ந்து தனது முத்திரையை பதித்து வருகிறார்.

டாப் படங்களில் லிஸ்ட் இதோ…
தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் பிஸியாக பணியாற்றி வரும் சாம் சி எஸ், தமிழில் “கராத்தே பாபு”, “சர்தார் 2”, புஷ்கர்–காயத்ரி இயக்கும் புதிய படம், ஹெச். வினோத் – தனுஷ் கூட்டணி படம், “டிமான்டி காலனி 3” உள்ளிட்ட முக்கிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கு நடிகர் ராம் போதினேனி முதல் முறையாக இயக்கும் படத்துக்கும் இசையமைக்கிறார். அதோடு மகாவதார் நரசிம்மா படத்தை இயக்கிய அஸ்வின் குமார் இயக்கத்தில் பான் இந்திய படமாக உருவாகும் மகா அவதார் பரசுராம் படத்துக்கு தற்போது தனித்துவமாக இசையமைத்து வருகிறார். அதோடு பாலிவுடிலும் தனது இசை மூலம் தடம் பதித்து வருகிறார்.