Take a fresh look at your lifestyle.

கார்த்திக்கு சூர்யா போல் ருத்ராவுக்கு விஷ்ணு விஷால்

37

கார்த்திக்கு சூர்யா போல் ருத்ராவுக்கு விஷ்ணு விஷால்
கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா ஹீரோவாக நடித்துள்ள படம் ‘ஓஹோ எந்தன் பேபி’. இப்படம் வரும் 11ம் தேதி வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தி பேசியது, “விஷ்ணு விஷால் மேடையில் சொன்ன கதையை கேட்ட போது ‘வானத்தை போல’ படம் போல இருந்தது. அப்பா என்னை கையில் தூக்கி வைத்திருந்தால் அண்ணா தோளில் தூக்கி வைத்திருப்பார். அந்த வகையில் நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கும் வந்தேன். நான் சினிமாவுக்கு வந்தபோது அத்தனை பேர் என்னை வாழ்த்தி, அன்பு கொடுத்தார்கள். அந்த அன்பை திரும்ப கொடுக்கவே இங்கு வந்தேன் என்றார்.