24 மணிநேரத்தில் நாட்டு நடப்பு என்னனு தெரிஞ்சிக்கோங்க
✦”தேர்தலில் ஆர்வத்துடன் பங்கேற்ற மேற்குவங்க, தமிழக வாக்காளர்களுக்கு எனது பாராட்டுகள்”
✦”தமிழகத்தில் தேர்தல் பறக்கும் படை, நிலை கண்காணிப்பு குழு திரும்ப பெறப்பட்டுள்ளது” – தேர்தல் ஆணையம்
✦“இவர்களுக்கெல்லாம் என்ன அரசியல் தெரியும்? எப்படித் தாக்குப் பிடிப்பார்கள் என்று ஏளனம் பேசியோருக்குச் செயல் மூலம் பதிலடி தந்த தோழர்களே.. உங்களுக்கு என் மனம்நிறைந்த வாழ்த்துகளும் நன்றியும்’’ – விஜய் அறிக்கை
✦”தேர்தல் முடிவுக்கு பின் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தாமாக முன்வந்து சரிபார்க்கப்படும். விவரங்களை சரிபார்க்க வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு” – சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை பதில்
✦ தேர்தல் பிரசாரத்தில் புறாக்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக விஜய்க்கு கடிதம்
✦”நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விநியோகம் சீராக உள்ளது. உள்நாட்டு LPG விநியோகம் தடையின்றி செயல்பட்டு வருகின்றன” – மத்திய அரசு
✦”ஜூலை 15 வரை கோடைக்கால நெரிசலை குறைக்க 18,262 சிறப்பு ரயில்கள் இயக்கம், முதற்கட்டமாக 11,878 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்”
✦மதுரை, வேலூர், சேலம், நாமக்கல், தருமபுரி, திருச்சி, ஈரோடு, சென்னையின் மீனம்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெயில் இன்று சதம் அடித்தது
✦206 ரன்கள் இலக்குடன் ஆடிய பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி அபார வெற்றி