விக்ரம் பிரபுவை பெண் ரசிகைகள் வாழ்த்தினர்: சுஷ்மிதா பட் தகவல்
,அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், அருள்தாஸ், ரமேஷ் திலக், முருகானந்தம் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான ‘லவ் மேரேஜ்’ படம் ரசிகர்களை கவர்ந்து உள்ளது. இதை ஒட்டி படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இவ்விழாவில் நடிகை சுஷ்மிதா பட் பேசியது, நான் நடித்திருந்த அம்பிகா கதாபாத்திரத்திற்கு ரசிகர்கள் எப்படி வரவேற்பு அளிப்பார்கள்? என்று பதற்றத்துடன் இருந்தேன். ஆனால் இந்த கேரக்டரை இயக்குநர் நேர்த்தியாக வடிவமைத்திருந்தார். இந்தப் படத்தில் எனக்கு தங்கையாக நடித்த மீனாட்சி தினேஷ் அற்புதமாக நடித்திருந்தார். அதேபோல் ராம் கேரக்டரில் நடித்திருந்த விக்ரம் பிரபுவிற்கு ஏராளமான பெண் ரசிகைகள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.படத்தின் வெற்றிக்கு ஷான் ரோல்டனின் இசையும் ஒரு காரணம் என்றார்.
Prev Post
Next Post