Take a fresh look at your lifestyle.

” ஃபீல் மை லவ் ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

23

” ஃபீல் மை லவ் ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
பல தமிழ் படங்களை தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் விநியோகம் செய்தவரும், ஏராளமான ‘பான்- இந்தியா’ படங்களை வெளியிட்டவருமான எ.என். பாலாஜி முதல் முறையாக தமிழில் தயாரித்திருக்கும் படம் ” ஃபீல் மை லவ் “தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தில் எம் எஸ் பாஸ்கர், ஆதித்யா பாஸ்கர், ஐரா, அம்மு அபிராமி, ராஜய்யப்பா, நோபிள் ஜேம்ஸ், மதுசூதனன் ராவ் மற்றும் பிரியங்கா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு எம்.எஸ். ஒளிப்பதிவை செய்ய, ராஜரவிவர்மா மற்றும் பாலசுப்ரமணியன் ஆகியோர் இசையமைக்கின்றனர். ஹரி பிரகாஷ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் ஒரு அதிசயம் நிகழலாம் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது.