Take a fresh look at your lifestyle.

பொங்கல் ரேஸில் களம் இறங்கிய திரௌபதி 2

157

பொங்கல் ரேஸில் களம் இறங்கிய திரௌபதி 2
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள ’திரௌபதி 2’ திரைப்படம் பொங்கலுக்கு களம் இறங்குகிறது. இம்மாத இறுதியில் வெளியாக இருந்த இப்படம், ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனதால், முன்கூட்டியே ரிலீஸ் ஆகிறது. ஏற்கனவே சென்சார் செய்யப்பட்டு தயாராக இருந்த திரௌபதி-2 படத்தின் புரமோஷன் பணிகள் தற்போது துவங்கி யுள்ளது. இன்று 10-ம் தேதி மாலை இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது. நேதாஜி புரொடக்ஷன்ஸ் சார்பில் சோழ சக்ரவர்த்தி, ஜி.எம்.பிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்துள்ளார். இது நம் மண்ணின் வரலாற்று கதை.இதை இந்த தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில் மூன்றாம் வீரவல்லாள மகாராஜரும்,வீரசிம்மகாடவராயரும் சேர்ந்து வெள்ளித்திரையில் இந்த பொங்கல் தினத்தன்று வருகிறார்கள்.