Take a fresh look at your lifestyle.

கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 வில் ஹீரோ யார் தெரியுமா?

98

கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 வில் ஹீரோ யார் தெரியுமா?
ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் நடிகர் விஜயகாந்த் நடித்த 100-வது படம் கேப்டன் பிரபாகரன். இப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்நிலையில் 33 ஆண்டுகளுக்கு பிறகு கேப்டன் பிரபாகரன் படம் மீண்டும் வரும் 22-ந் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது. இதையொட்டி நடந்த பிரீமியர் ஷோவில் பங்கேற்ற ஆர்.கே.செல்வமணி கூறுகையில், இத்தனை ஆண்டுகள் கழித்து கேப்டன் பிரபாகரன் படம் இவ்வளவு எழுச்சியுடன் வெளியாவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. அதே நேரம் விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து கேப்டன் பிரபாகரன் பார்ட் 2 படம் எடுக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது. என்னை வளர்த்து விட்ட விஜயகாந்த்துக்கு நன்றி கடனாக இதை செய்ய விரும்புகிறேன் என்றார்.