Take a fresh look at your lifestyle.

அதர்ஸ் படத்தின் கதை என்ன தெரியுமா?

43

அதர்ஸ் படத்தின் கதை என்ன தெரியுமா? (அ) செயற்கை கருத்தரிப்பு மோசடிகளை சொல்லும் படம் அதர்ஸ்

அறிமுக இயக்குனர் அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகி உள்ள படம்‘அதர்ஸ்’. இதில் புதுமுக நடிகர் ஆதித்யா மாதவன் ஹீரோவாக நடிக்க, அவருக்கு ஜோடியாக கவுரி ஜி.கிஷன் நடிக்கிறார். மேலும் அஞ்சுகுரியன், முனீஷ்காந்த், ஹரீஷ் பேரடி ஆகியோர் நடித்து உள்ளனர்.கிராண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். வரும் நவம்பர் 7-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள இப்படம் பற்றி இயக்குனர்அபின் ஹரிஹரன் கூறியது, சென்னையில் உள்ள செயற்கை கருத்தரிப்பு மையங்கள் மூலம் சிகிச்சை பெற்று பிறந்துள்ள குழந்தைகளுக்கு சில பிரச்சினைகள் ஏற்படுகிறது. அது என்ன, அது யாரால் அது செயற்கையாக உருவாக் கப்பட்டது என்பதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக ஆதித்யா மாதவன் நடிக்கிறார். இந்த கேரக்டருக்கு புதுமுகம் என முடிவு செய்தவுடன்
ஆடிஷன் மூலம் ஆதித்யா மாதவனை தேர்வு செய்தேன். நவம்பர் 7ல் படம் திரைக்கு வருகிறது என்றார்.