Take a fresh look at your lifestyle.

நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர்

98

நடிகரிடம் மன்னிப்பு கேட்ட இயக்குநர்
சுகிர்தன் கிறிஸ்து ராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஷ்வர் இயக்கத் தில், இலங்கையின் வாழ்வியல் பின்னணி யில் உருவாகி இருக்கும் படம் அந்தோணி.இதில் கயல் வின்சென்ட், டிஜே பானு, நிழல்கள் ரவி, அருள்தாஸ், சுதர்சன், ஷாமி ஆகியோர் நடித்துள்ளனர்.ரிஷி செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்க,ஓசை பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இதன் பாடல், டிரெய்லர் வெளியீட்டு விழா நடந்தது. இதில் சீனு ராமசாமி பேசியது, இந்தப் படத்தில் நடித்த கயல் வின்சென்ட் இனி அந்தோனி வின்சென்ட் என்று அழைக்கப்படு வார்.நான் அவரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள் கிறேன். நீ இவ்வளவு சிறந்த நடிகன் என்று எனக்குத் தெரியாமல் போய்விட்டது.என்னை மன்னித்து விடு. எனது நீர்ப்பறவை படத்தில் உன்னை நடிக்க வைக்க நினைத்தேன் அப்போது முடியாமல் போய்விட்டது. நிச்சயம் எதிர்காலத்தில் இணைந்து செயல்படலாம் என்றார்.