டாக்டர் ராமதாஸ் பயோபிக் படத்தை இயக்கும் சேரன்
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராம தாசின் ஆரம்ப கால வாழ்க்கை மற்றும் அரசியல் பயணங்களை மையமாக கொண்டு புதிய திரைப்படம் உருவாகிறது. இந்த படத்தை இயக்குனர் சேரன் இயக்குகிறார்.
இந்த நிலையில் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளை யொட்டி படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.ஜி.கே.எம். தமிழ்குமரன் தயாரிக்கும் இந்த படத்தில் ராமதாஸ் கதாபாத்திரத்தில் ‘ஆரி’ நடிக்கிறார். இன விடுதலைக்கான போராட்டத்தின் வரலாறு என்ற கருப்பொருளுடன் படம் உருவாகிறது.
