Take a fresh look at your lifestyle.

இயக்குனர் விஜய்யை நெகிழ வைத்த பாலா

77

இயக்குனர் விஜய்யை நெகிழ வைத்த பாலா
ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் ‘காதல் ரீசெட் ரிப்பீட்’.இதில் மது மகேஷ், ஜியாசங்கர், ஜெயபிரகாஷ்,விஜி சந்திரசேகர்,அர்ஜூன் அசோகன் உள்பட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரீஷ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார்.மாலி அன்டு மான் வி மூவி மேக்கர்ஸ், டி ஸ்டூடியோஸ், டென்வி புரொடக்‌ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
வரும் 6-ந் தேதி படம் வெளியாகிறது. இதையொட்டி நடந்த ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் பாலா பேசியது, ‘இயக்குநர் விஜய் தான் எனக்கு குரு. ஜூனியராக இருக்கலாம். இருந்தாலும் எந்த டெக்னீஷனாக இருந்தாலும் எப்படி
கடுமையாக உழைக்க வேண்டும் என்பதை எனக்கு கற்றுக் கொடுத்த குரு இயக்குநர் விஜய் தான். ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் அவர் எனக்கு தாயுமானவன். என்னுடைய நல்லது கெட்டது என அனைத்திற்கும் முதல் ஆளாக நின்று
பங்கெடுப்பது அவன் தான்.தாயும் தகப்பனுமாக இருந்து என்னை பார்த்துக் கொண்டிருக்கிறான்.ஹாரிஸ் ஜெயராஜ் மற்றும் தயாரிப்பாளர்கள் புதுமுக நடிகர்கள் என அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.