தனுசுக்கு சினிமாவே பிடிக்காது: கஸ்தூரி ராஜா
மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ், நாக துர்கா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘லவ் ஓ லவ்’. ஜினிமா மீடியா சார்பில் தினேஷ் ராஜ், கிரிேயட்டிவ் எண்டர்டேயினர் ஸ் சார்பில் பி.தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இதில் செல்வராகவன், கே. எஸ்.ரவிக்குமார், வனிதா விஜயகுமார் உள்பட பலர் நடித்துள்ளனர். இன்று ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இதில் இயக்குனர் கஸ்தூரிராஜா பேசியது, என்னோட பசங்க சினிமாவுக்கு வரக்கூடாது என நினைத்தேன். பிரிவ்யூ காட்சிகளுக்கு கூட பசங்கள கூட்டிட்டுப்போக மாட்டேன். ஆனால் செல்வராகவன் காதல் கொண்டேன் படம் மூலம் இயக்குனராகி இன்று பெரிய இடத்தில் உள்ளார். என் இளைய மகன் தனுசுக்கு சினிமாவை பிடிக்காது. முதல் ஐந்து படங்கள் அழுது கொண்டே தான் நடிப்பார். ஆனால் இன்று பெரிய நடிகராகவும் இயக்குனராகவும் கலக்கி வருகிறார் என்றார்.
Prev Post