தாதாவாக நடிக்க மறுத்த தேவா
இசையமைப்பாளர் தேவாவை ஒரு படத்தில் வில்லன் கேரக்டரில் நடிக்க கேட்டுள்ளனர். அதை தேவா மறுத்துவிட்டார் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், மீசைய முறுக்கு பார்ட் 2 படத்தில் நடிக்க அழைத்தனர். இயக்குனர் கதை சொன்னார், அற்புதமான கதை. இதில் நீங்கள் தான் தாதா என்று சொன்னார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். அதற்கு காரணம், தற்ப்போது நான் எனது கான்சர்ட்டில் பிஸியாக இருக்கிறேன், அதனால் கால் சீட் பிரச்சினை ஏற்படும்.அதோடு எனக்கு நடிக்க தெரியாது, கூட நடிக்கும் நடிகர்கள் டிஸ்டர்ப் ஆவார்கள் எனவேதான் அந்த பட வாய்ப்பு மறுத்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
Prev Post
Next Post