Take a fresh look at your lifestyle.

படங்கள் ரிலீஸில் கட்டுப்பாடு தேவை: உதயா கோரிக்கை

119

படங்கள் ரிலீஸில் கட்டுப்பாடு தேவை: உதயா கோரிக்கை
பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் உதயா நடிப்பில் கடந்த 1-ந் தேதி வெளியான படம் அக்யூஸ்ட் .படத்தை ஜேசன் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து தங்கவேல், பன்னீர் செல்வம் ஆகியோர் தயாரித்திருந்தனர். தியேட்டரில் ரசிகர்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற இந்த படத்தின் நன்றி அறிவிப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் நடிகர் உதயா பேசியது, அக்யூஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதியை முதலில் அறிவித்து புரோமோஷன் பணிகளை தொடங்கிவிட்டோம். அப்புறம் பார்த்தால் வரிசையாக 12 படங்களை அதே தேதியில் அறிவிக்கிறார்கள். படங்களை வெளியிடுவதில் கண்டிப்பாக நமக்குள் ஒரு கட்டுப்பாடு விதிகளை உருவாக்க வேண்டும். அப்போதுதான் தயாரிப்பாளர்கள் அடுத்தது படம் தயாரிக்க முன்வருவார்கள் என்றார்.