Take a fresh look at your lifestyle.

கோல்ட் கால் -விமர்சனம்

2

கோல்ட் கால் -விமர்சனம்
பெங்களூருவில் வேலை தேடி அலையும் சித்து,சந்தோஷ்,ஸ்ரீவைஷ்ணவ், விஜய் பாலாஜி ஆகியோருக்கு ஒரு நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்சிகியூட்டிவ் வேலை கிடைக்கிறது. ஆனால் அவர்களுக்கு வேலை கிடைத்த சந்தோஷத்தை விட, எப்படி வேலை செய்யாமல் ஓபி அடிப்பது என்பது தான் பெரிதாக தெரிந்தது. இதனால் அவர்களின் வேலை பறிபோகும் சூழல் உருவாக, அதே நேரத்தில் எதிர்பாராத ஒரு கடத்தல் சம்பவமும் நடக்க, அதிலிருந்து நால்வரும் எப்படி மீந்தார்கள் என்பதே படத்தின் மீதி கதை. சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ் கிருஷ்ணா, விஜய் பாலாஜி ஸ்ரீகாந்த் ஆகியோரின் இயல்பான நகைச்சுவை கலந்த நடிப்பு ரசிக்க வைக்கிறது. நிஷா ஹெக்டே,மேரி லிட்டி,அமிதா ரங்கநாதா, கீர்த்தனா புல்கி ஆகியோரின் நடிப்பும் கூடுதல் பலம்.பெங்களூருவை கதையின் பின்னணியாக கொண்டு,திரில்லர், காமெடி கலந்து சுவாரசியமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் தம்பிதுரை. இருப்பினும் திரைக்கதையில் கவனம் செலுத்தி இருக்கலாம். சரவணனின் ஒளிப்பதிவு மற்றும் பிரணவ் கிரிதரனின் இசை ஓகே ரகம்.