சிரஞ்சீவி பேரன், பேத்திக்கு பெயர் சூட்டு விழா
தெலுங்கு மெகாஸ்டார் சிரஞ்சீவியின் மகனும் டோலிவுட் முன்னணி நடிகருமான ராம் சரண் மற்றும் உபாஸனா தம்பதிக்கு ஜனவரி 31 அன்று இரட்டைக் குழந்தைகள் பிறந்தது. அந்த குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா ஹைதராபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடந்தது. இதில் மகனுக்கு சிவராம் கொணிதெலா எனவும் மகளுக்கு அன்வீரா தேவி கொணிதெலா எனவும் பெயர் வைத்துள்ளனர். ஏற்கனவே அவர்களுக்கு கிளிம் காரா மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.